புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ரவுடிக்கும்பலின் மதுபோதை ஆபாச கச்சேரி திருமண விழா கொண்டாட்டம்.. தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை படுகொலை.!
வில்லியனூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக திருமண விழா கொண்டாடியதை எதிர்த்து குரல்கொடுத்த புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சதீஷ் என்ற மணிகண்டன் (வயது 28). இவர் ஏ.சி மெக்கானிக்காக இருந்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக சதீஷிற்கும் - மதிவதனா (வயது 25) என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினத்தில் சதீஷின் எதிர்வீட்டில் வசித்து வரும் சங்கர் (வயது 32) - ரமணி (வயது 28) தளபதியின் திருமண நாளினை முன்னிட்டு தெருவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது, ரமணியின் சகோதரர் ராஜா, நண்பர்கள் அசார், தமிழ்செல்வன் ஆகியோர் மதுபானம் அருந்திவிட்டு அவதூறான வார்த்தைகளை பேசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விஷயத்தை சதீஷ், ஹரி, சபரி மற்றும் ராஜவேல் ஆகியோர் தட்டிகேட்கவே, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது வீட்டு வாசலில் நின்று விளையாட, ராஜா, அசார் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் சதீஷை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.
சதீஷின் அலறல் சத்தம் கேட்டு மனைவி மற்றும் உறவினர்கள் வரவே, கொலைகார கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. மதிவதனா மற்றும் சதீஷின் குடும்பத்தினர் பெரும் கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகவே, கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வில்லியனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சதீஷின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 2 பேரை கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். ராஜா, அசார் மற்றும் தமிழ்செல்வன் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.