சாலையில் நடந்து சென்றவரை திடீரென தாக்கிய சைக்கோ.! பதறவைக்கும் சம்பவம்.. என்ன நடந்தது?
சாலையில் நடந்துசென்றவரை சைக்கோ ஒருவன் திடீரென தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவீந்தர் என்பவர் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில்,ரவீந்தருக்கு எதிர் திசையில் வந்த மர்ம நபர் ஒருவர் கையில் இருந்த கட்டையால் ரவீந்தரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரவீந்தர் நிலைகுலைந்து கீழே விழ, மர்ம நபர் தொடர்ந்து நான்கு முறை ரவீந்தரின் தலையில் அடிக்கிறார். அருகில் இருந்தவர் இதை தடுக்க முயல, அவரையும் தாக்க முயல்கிறார் அந்த சைக்கோ நபர்.
உடனே, அருகில் இருந்த மக்கள் கூட்டமாக கூடி, அந்த மர்ம நபரை பிடிக்க முயல, அவர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். அடிபட்டு கிடந்த ரவீந்தரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் CCTV காட்சிகளை ஆதாரமாக வைத்து சைக்கோ நபரை கைது செய்துள்ளனர்.
அவர் ரவீந்தரை குறிவைத்து தாக்கினாரா? அல்லது மனநிலை பாதிப்பால் இதுபோன்று நடந்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.