இந்தியா

21 வயதில் டி.எஸ்.பி..! 25 வயதில் சப் கலெக்டர்..! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் சிங்கப்பெண்..! யார் இந்த பிரியா வர்மா..?

Summary:

Priya warma IAS

சி.ஏ.ஏ. வுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பாஜக வைச் சேர்ந்த நபர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததன் மூலம் ஒரே நாளில் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்தான் இந்த பிரியா வர்மா.

யார் இந்த பிரியா வர்மா? மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தின் மங்காலியா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த பிரியா வர்மா. சிறுவயதில் இருந்தே மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என கனவுடன் படித்துவந்த இவர் தனது விடா முஅயற்சியால் கடந்த 2014-ம் ஆண்டு உஜ்ஜைன் மாவட்டத்திலுள்ள பைரவ்கர் சிறைச்சாலையில் சிறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து 2015-ம் ஆண்டு அதே மாவட்டத்தில் மாவட்டக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பிரியா வர்மா மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டபோது அவரது வயது 21.

தற்போது ராஜ்கர் மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார் பிரியா வர்மா. சிறுவயதில்லையே மிகப்பெரிய இடத்திற்கு வந்த பிரியா வர்மா, தனது அதிரடி நடவடிக்கைகளால் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறிவருகிறார்.


Advertisement