அரசியல் இந்தியா

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று இறுதிச்சடங்கு! பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

Summary:

Prime Minister Modi pays homage to Pranab Mukherjee's body

கடந்த மாதம் 10 ஆம் தேதி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டி காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரணாப் முகர்ஜி. அப்போது அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக கோமாவில் இருந்த பிரணாப், நேற்று காலமானார். பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. 

ராஜாஜி மார்க் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின், பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜத் முகர்ஜிக்கு பிரதமர் ஆறுதல் கூறினார். காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா கால விதிமுறைகளின்படி அவருக்கு டெல்லியில் இன்று இறுதி சடங்குகள் மற்றும் இறுதி மரியாதைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement