இந்தியா

கர்ப்பிணி என்று கூட பாராமல் மகளுக்கு, தந்தை செய்த கொடூரம்- அதிரவைக்கும் தகவல்!

Summary:

pregnant girl killed by her father

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்கோபரை சேர்ந்தவர் ராஜ்குமார் (55). இவருக்கு மீனாட்சி என்ற 20 வயது மகள் உள்ளார். ராஜ்குமாரின் மகள் மீனாட்சி, பிரிஜேஷ் (26) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

அவர்களது காதல் விவகாரம் ராஜ்குமாருக்கு தெரிய வந்த நிலையில் சாதி வேறுபாடு காரணமாக அவர்கள் காதலை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு ஓடிய மீனாட்சி, பிரிஜேஷை திருமணம் செய்து கொண்டு வேறு ஊரில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ள மீனாட்சி தனது குடும்பத்தை காண வேண்டும் என்ற ஆசையில் அவர்களைக் காண வருவதை தொலைபேசி மூலம் முன்னதாகவே தெரிவித்துள்ளார்.

ஆனால் மீனாட்சி ஊருக்கு வந்தால் தனக்கு அவமானமாகி விடும் என்று நினைத்த ராஜ்குமார். மகளை வேறு இடத்திற்கு வரவழைத்து கர்ப்பிணி  என்றும் பாராமல் அவர் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பெற்ற மகள் கர்ப்பிணி என்று கூட பாராமல் தந்தை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement