இந்தியா

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது.? மருத்துவமனை வெளியிட்ட செய்தி.!

Summary:

pranab mukherjee health condition

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த 10 ஆம் தேதி உடல்நிலை மிக மோசமான நிலையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமான நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.


Advertisement