ஒரே இரவில் அடித்த பேரதிர்ஷ்டம்! அடுத்தகணமே போலீஸில் தஞ்சமடைந்த கூலித்தொழிலாளி! ஏன் தெரியுமா?
ஒரே இரவில் அடித்த பேரதிர்ஷ்டம்! அடுத்தகணமே போலீஸில் தஞ்சமடைந்த கூலித்தொழிலாளி! ஏன் தெரியுமா?

கேரளா மாநிலத்தில் தற்போதும் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் பெருமளவில் உள்ளது. மேலும் இதன்மூலம் பலருக்கும் பெருமளவில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தாஜ் முல்ஹக் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கூலி வேலை செய்து பிழைப்பதற்காக கேரளாவிற்கு வந்து தஞ்சம் அடைந்தார். அங்கு அவருக்கு திருமணமாகி தற்போது 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கூடித் தொழில் செய்து வாழ்க்கையை ஒட்டி வந்த முல்ஹக் தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இவ்வாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு வாங்கிய இவருக்கு எதிர்பாராதவிதமாக ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது.
அதனைத் தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்தநிலையில் திடீரென்று முல்ஹக் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சிலர் தன்னிடமிருந்த லாட்டரி சீட்டை பறிக்க முயன்றதாகவும், பரிசுத்தொகையை எப்படி வாங்குவது என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார்கள் முல்ஹக்கிற்கு உண்மையாகவே பரிசுதொகை விழுந்ததா என்பதை விசாரணை நடத்திய பிறகு அவருக்கு சேர வேண்டிய தொகையை வாங்கிக் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து தாஜ் முல்ஹக் போலிஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தான் அனுபவித்த கஷ்டங்கள் தீர்ந்துவிட்டது இனி மகிழ்ச்சியாக வாழப்போவதாக கூறியுள்ளார்.