கூரியர் நிறுவன பணியாளர் கொலை.. கைதிக்கு மாவுக்கட்டு - தப்பிச்செல்கையில் எலும்பு முறிவு.!

கூரியர் நிறுவன பணியாளர் கொலை.. கைதிக்கு மாவுக்கட்டு - தப்பிச்செல்கையில் எலும்பு முறிவு.!


pondicherry-villianur-murder-case-accuse-arrested-by-po

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர், அரும்பார்த்தபுரம் புதுநகரில் வசித்து வருபவர் சீனிவாசன் என்ற மூர்த்தி (வயது 31). இவர் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 21 ஆம் தேதி இரவில் சாராயக்கடைக்கு சென்ற சீனிவாசனுடன், சேந்தநத்தம் சஞ்சீவ் (வயது 25), புகழ் (வயது 24) ஆகியோர் பேச்சுக்கொடுத்து சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு வைத்து மூவரும் சேர்ந்து சாராயம் குடித்துக்கொண்டு இருந்த நிலையில், மேற்படி சாராயம் வாங்க மூர்த்தியிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, சாராய பாட்டிலை உடைத்து மூர்த்தியை கொலை செய்த இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

Pondicherry

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சஞ்சீவை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த புகழை வலைவீசி தேடி வந்தனர். புகழ் சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் புகழை தேடி வந்தனர்.

நேற்று இரவு நேரத்தில் வீட்டிற்கு வருவதற்காக ஆற்றை கடந்து மூர்த்தி நகர் இரயில்வே கேட் பகுதியில் நடந்து சென்ற புகழை அதிகாரிகள் மடக்கியுள்ளனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற புகழ், தண்டவாளத்தில் நிலைதடுமாறி விழுந்து தனது கால்களை உடைத்துக்கொண்டார். 

புகழை கைது செய்த அதிகாரிகள், கால் முறிவுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்து மாவுக்கட்டு சிகிச்சை அளிக்க வழிவகை செய்தனர்.