ஒன்றரை மாத கர்ப்பிணி மர்ம மரணம்... நடந்தது என்ன?.. கண்ணீரில் உறவினர்கள்.!

ஒன்றரை மாத கர்ப்பிணி மர்ம மரணம்... நடந்தது என்ன?.. கண்ணீரில் உறவினர்கள்.!


Pondicherry Villianur 1 Month Pregnant Woman Mystery Death

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் புதுப்பேட், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் இளமாறன். இவர் அரசு பொதுப்பணித்துறை கழிவுநீர் சுத்திகரிப்பு வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி வினோதா (வயது 28). தம்பதிகளுக்கு தீபனா என்ற 5 வயது மகள் இருக்கிறார். 

வினோதா தற்போதைய நிலையில் ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில், இன்று வீட்டில் இருக்கும் போது வினோதா திடீரென மயங்கி விழவே, அவரை மீட்ட உறவினர்கள் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வினோதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

Pondicherry

இந்த விஷயம் தொடர்பாக வில்லியனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வினோதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வினோதாவின் தாய் புஷ்பவல்லி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.