காதலியை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்.. அதிரவைக்கும் சம்பவம்.. பகீர் பின்னணி.!

காதலியை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்.. அதிரவைக்கும் சம்பவம்.. பகீர் பின்னணி.!


Pondicherry Pakur Woman Raped by Lover and Intimation about Naked Video

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூர், மணமேடு கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவரின் மகன் சந்தோஷ் (வயது 27). பாகூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். சந்தோஷும் - இளம்பெண்ணும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

காதலிக்கும் நேரத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த காதல் ஜோடி, அவ்வப்போது தனிமையிலும் சந்தித்து வந்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடத்தில் சந்தோஷ் தனக்கு சொந்தமான காலி வீட்டிற்கு காதலியை அழைத்துச என்று, திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறார். 

அதனைத்தொடர்ந்து, பல்வேறு சூழ்நிலைகளில் காதலியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த சந்தோஷ், அதனை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாவும் பதிவு செய்துள்ளார். மகளின் காதல் விபரத்தை அறியாத பெற்றோர், மகளுக்கு வரன் பார்க்க தொடங்கியுள்ளனர். இதனால் காதலனிடம் பெண் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார். 

Pondicherry

இதற்கு சந்தோஷ் மறுப்பு தெரிவிக்கவே, பெண்ணுக்கு கடந்த வருடத்தில் அக். மாதம் நிச்சயம் நடைபெற்று, கடந்த பிப். 7 ஆம் தேதி திருமண தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. காதலி கெஞ்சும் போது ஓடிய சந்தோஷ், மீண்டும் அவரை ஏமாற்றும் பொருட்டு திருமணத்தை ஏதேனும் காரணம் சொல்லி நிறுத்தினால், நானே உன்னை திருமணம் செய்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

காதலனின் கண்ணீரை உண்மை என நம்பிய பெண்மணி திருமணத்தை நிறுத்திய நிலையில், சந்தோஷை பெற்றோரிடம் வந்து வரன் கேட்க கூறியுள்ளார். திருமணம் நிறுத்தப்படும் வரை காதலியிடம் கெஞ்சிய காமுகன் சந்தோஷ், அதன் பின்னர் மீண்டும் தனது சுய ரூபத்தினை காண்பிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 15 ஆம் தேதி காதலியை மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த சந்தோஷிடம், திருமணம் செய்யாமல் எதுவும் இயலாது என்று திட்டவட்டமாக பெண்மணி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், காதலியை தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும், நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வராத பட்சத்தில், உனது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வேன். 

Pondicherry

இந்த விஷயத்தை வெளியே கூறினால், உன்னை உயிருடன் எரித்து கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன பெண்மணி, கடந்த பிப். 16 ஆம் தேதி தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். மயங்கிருந்த பெண்ணை மீட்ட குடும்பத்தினர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி கரையாம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் இளம்பெண்ணை ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த காதலன் என்ற கயவன் சந்தோஷை வலைவீசி தேடி வருகின்றனர்.