காதல் தோல்வியால் விரக்தி.. வாலிபர் செய்த விபரீதத்தால் சோகம்.. பரபரப்பான பேருந்து நிலையம்.!

காதல் தோல்வியால் விரக்தி.. வாலிபர் செய்த விபரீதத்தால் சோகம்.. பரபரப்பான பேருந்து நிலையம்.!


pondicherry-orleampeth-love-failure-man-suicide

காதல் தோல்வியால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஆட்டோ ஓட்டுநர் எலிமருந்து தின்று தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவிந்தசாலை பகத் சிங் பகுதியை சார்ந்தவர் ஆயிஷா (வயது 50). இவரின் மகன் சையத் ரியாசுதீன் (வயது 28). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

சையத் ரியாசுதீன் பெண்மணி ஒருவரை காதலித்து வந்த நிலையில், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனால் காதல் தோல்வி காரணமாக சையத் மனஉளைச்சலில் இருந்துள்ளார். 

Pondicherry

இந்நிலையில், உச்சகட்ட மனவேதனைக்கு சென்ற சையத் ரியாசுதீன் பேருந்து நிலையத்திற்கு சென்று எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மயங்கி விழுந்து கிடைத்தவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், மீட்டு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சையத் ரியாசுதீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.