ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
மசாஜ் சென்டர் பெயரில் பலான தொழில்.. சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி., 6 பெண்கள் மீட்பு.!
புதுச்சேரி மாநிலத்தில் ஸ்பா, மசாஜ் சென்டர், அழகு நிலையம் என்ற பெயரில் நடந்து வரும் விபச்சாரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், விபச்சாரத்தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகளையும் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அண்ணாசாலை பகுதியில், மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் நடந்து வருவதாக ஓதியஞ்சாலை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அங்கு 2 அறைகளில் பெண்களை வைத்து விபச்சாரம் நடந்து வந்தது உறுதியானது.
இதனையடுத்து, மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை செய்கையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியை சார்ந்த மதன்ராஜ் (வயது 31), புதுச்சேரி வில்லியனூர் திரிவேணி நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 6 பெண்களும் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.