தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
2 பீர் வாங்கினால் 1 பீர் இலவசம்., குவாட்டருக்கு கோழி முட்டை; களைகட்டும் சரக்கு விற்பனை..! பார் உரிமையாளர்கள் நூதன டெக்னீக்.!

புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகளில் மதுவிரும்பிகள் ஏராளம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அரசின் மதுபான கழகங்கள் மதுவிற்பனை செய்வதால் அவர்கள் விற்பனை செய்யும் ரகம் மட்டுமே கிடைக்கும்.
புதுவையிலோ உள்நாடு, வெளிநாடு என 900 வகை மது, 35 வகை பீர் கிடைக்கின்றன. ஒயின், வோட்காவும் கிடைக்கிறது. இதனை வாங்க வார இறுதி நாட்களில் அண்டை மாநிலத்தவர்கள் விடுமுறையை கொண்டாட புதுவை வருகின்றனர்.
இவர்கள் புதுச்சேரியின் எந்த பக்கத்திற்கு சென்றாலும் மதுக்கடைகள், பார்கள் இல்லாத இடமே இல்லை என்ற நிலை இருக்கிறது. இவர்களை கவர அவ்வப்போது பார் உரிமையாளர்கள் புதிய நுட்பத்தையும் கையாண்டு போட்டி போட்டு வருகின்றனர்.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள சில மதுக்கடைகளில் 2 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம், குவாட்டருக்கு முட்டை இலவசம் என விற்பனை நடக்கிறது. நகர் பகுதியில் இருக்கும் பார்களில் இவை நடக்கின்றன.
இந்த தகவலை அறிந்த கலால்துறை மது விளம்பரங்கள் சட்டத்தினை மேற்கோளிட்டு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. பார்கள், விடுதிகளில் மதுவகை விளம்பரம் இருந்தால் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.