அட்டகாசமான ஆக்சன் காட்சிகள்.. பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம்.. வெளியானது சலார் படத்தின் டிரைலர்..!
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா.. அண்ணன் மகளிடம் அநாகரிக செயல்.!
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா.. அண்ணன் மகளிடம் அநாகரிக செயல்.!

காரைக்கால் அருகே அண்ணன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் காவல் துறையினரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். தொழிலாளியின் குடும்பத்துடன், அவருடைய 27 வயது தம்பியும் வசித்து வருகிறார்.
அவருக்கு தற்போது வரை திருமணம் ஆகாத நிலையில், அண்ணனும் - அண்ணியும் வேலைக்கு சென்றதும் வீட்டில் சிறுமி தனது சித்தப்பாவுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், காமுக எண்ணம் கொண்ட சித்தப்பா, தனது அண்ணன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தாய் வீட்டிற்கு வந்ததும் விஷயத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, காரைக்கால் நகர காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காரைக்கால் காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பாவான 27 வயது இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.