பெற்றோரின் தந்தையால் விரக்தியடைந்த 14 வயது மகள் தூக்கிட்டு தற்கொலை; புதுச்சேரியில் பரிதாபம்.!Pondicherry 14 Aged Minor Girl Suicide

 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சோலை நகர், கல்லறை வீதியில் வசித்து வருபவர் மூர்த்தி. இவரின் மனைவி புஷ்பா. தம்பதிகளுக்கு 18, 17,16 வயதுடைய மகனும், மதீனா என்ற 14 வயது மகளும் இருக்கின்றனர். 

முத்தியால்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் மதீனா எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மூர்த்தி அவ்வப்போது மதுபானம் அருந்திவிட்டு மனைவி புஷ்பாவிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

கடந்து சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கணவருடன் கோபித்துக் கொண்ட புஷ்பா தனது குழந்தைகளை பாடசாலை வீதியில் இருக்கும் தங்கை மகேஸ்வரி வீட்டில் விட்டுவிட்டு, காலாபட் பகுதியில் தங்கிருந்து வீட்டு வேலை செய்து வருகிறார்.

Pondicherry

அவ்வப்போது தனது குழந்தைகளிடம் செல்போன் மூலமாக பேசி வந்து நிலையில், நேற்று மதியம் புஷ்பா மதினாவிடம் செல்போனில் பேசி இருக்கிறார். அப்போது, மகள் சோகமாக காணப்பட்ட நிலையில், அதன் காரணமும் தாயாருக்கு தெரியவில்லை. 

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்தியால்பேட்டை காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய்-தந்தை பிரிந்து வாழ்ந்ததன் காரணமாக மன வேதனையில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.