ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் கைப்பற்றப்பட்ட 700 கிலோ வெளி பொருள்.!! தேர்தலை சீர்குலைக்க சதியா.?

ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் கைப்பற்றப்பட்ட 700 கிலோ வெளி பொருள்.!! தேர்தலை சீர்குலைக்க சதியா.?



police-seized-700-kgs-of-explosives-from-rss-member-hou

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர் .

இதேபோன்று சோதனையின் போது கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் இருந்து 770 கிலோ வெடி பொருட்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலத்தில் பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

KERALAஇந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கொளவெல்லூரில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது அப்பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகியான வடக்கயில் பிரமோத் என்பவரது வீட்டில் இருந்து 770 கிலோ வெளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வெடி பொருட்கள் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

KERALAஇதனைத் தொடர்ந்து வெடிபொருட்களை கைப்பற்றிய காவல் துறையினர் தலைமறைவாக உள்ள ஆர்எஸ்எஸ் நிர்வாகி வடக்கயில் பிரமோத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்க வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா.? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணூர் மாவட்டத்தில் 770 கிலோ வெடிப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.