சொமாட்டோ விவகாரத்தில் அதிரடி திருப்பம்.. காமராஜின் கண்ணீருக்கு பதில் கிடைத்தது.. புகார் கொடுத்த பெண் மீதே வழக்கு பதிவு செய்த போலீசார்..

சொமாட்டோ விவகாரத்தில் அதிரடி திருப்பம்.. காமராஜின் கண்ணீருக்கு பதில் கிடைத்தது.. புகார் கொடுத்த பெண் மீதே வழக்கு பதிவு செய்த போலீசார்..



Police filed complaints against to the girl related to Zomatto issue

சொமாட்டோ ஊழியர் தனது மூக்கை உடைத்ததாக வீடியோ வெளியிட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த ஹிடேஷா என்ற பெண் கடந்த 9 ஆம் தேதி சொமாட்டோ நிறுவனம் மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது உணவு கொண்டுவர தாமதமானதால், இதுகுறித்து சொமாட்டோ டெலிவரி பாய் காமராஜிடம் கேட்ட போது அவர் தனது மூக்கை அடித்து உடைத்துவிட்டதாக அந்த பெண் இரத்தம் வழிய வழிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

Zomatto

மேலும் இந்த சம்பவம் தொடர்பகா அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் காமராஜை கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுதலை செய்தனர். இந்நிலையில் அந்த பெண்ணை நான் தாக்கவே இல்லை என்றும், உணவுக்கான பணம் கொடுங்கள் அல்லது உணவை திருப்பிக்கொடுங்கள் என தான் கேட்டதற்கு அந்த பெண் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரது செருப்பால் தன்னை தாக்க முயன்றதாகவும், அதனை தான் தடுக்க முயன்றபோது அந்த பெண்ணின் மோதிரம் பட்டே அந்த பெண்ணின் மூக்கில் இரத்தம் வந்ததாகவும் டெலிவரி பாய் காமராஜ் விளக்கம் கொடுத்திருந்தார்.

மேலும் இந்த வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றும்படியும், தனது தந்தை இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டநிலையில், தனி ஆளாக சம்பாதித்து தனது குடும்பத்தையும், சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது அம்மாவை காப்பற்றி வருவதாகவும் காமராஜ் சமீபத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் காமராஜுக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்கள் உட்பட நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துவந்தனர். இந்நிலையில் சொமாட்டோ டெலிவரி பாய் காமராஜ் கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் அந்த பெண் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.