4 குற்றவாளிகளையும் சுட்டுகொன்றது ஏன்? அதிகாலையில் நடந்தது என்ன? அதிரடியாக விளக்கமளித்தார் போலீஸ் கமிஷனர்!



police commisionar explain about encounter

கடந்த வாரம் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் லாரி டிரைவர்களால் வலுக்கட்டாயமாக தூக்கி செல்லப்பட்டு, வாயில் மதுவை ஊற்றி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து  கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, நவீன் மற்றும் சிறுவர்களான ஷிவா, சின்ன கேசவலு  ஆகிய நால்வரை கைது செய்தனர். மேலும் இன்று அதிகாலை அவர்கள் 4 பேரும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் என்கவுண்டர் குறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த இரு நாட்களாக தீவிர விசாரணை நடைபெற்றது. மேலும் குற்றவாளிகளும் வாக்குமூலம் அளித்திருந்தனர். 

police commisionar

 மேலும் இந்நிலையில் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் குற்றத்தை எவ்வாறு செய்தார்கள் என நடித்துக் காட்ட கூறினோம் அப்பொழுது குற்றவாளிகள் இருவர் எங்களது கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி எங்களை நோக்கிசுட துவங்கினர். மேலும் அவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து கற்களை எங்கள் மீது வீசி தாக்குதல் நடத்தி தப்ப முயற்சி செய்தனர். 

இதனால் இருபோலிஸாருக்கு பயங்கர காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்தே நாங்கள் நான்கு பேரையும் என்கவுண்டர் செய்தோம். இன்று காலை 5 40 மணி முதல் 6.15 மணிக்குள் சுமார் 15 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. மேலும் இந்த என்கவுண்டர் குறித்து மனித உரிமை ஆணையத்திற்கும்,  மாநில அரசிற்கும் விளக்கம் தர தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.