இவ்வுளவு மட்டமானவரா பயில்வான் ரங்கநாதன்? - பாடகி சுசித்ரா பரபரப்பு பேச்சு..!singer Susitra about bayilvan ranganathan

 

தமிழ் திரைப்பட நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், பல யூடியூப் சேனல்களில் தமிழ் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு தகவலை தெரிவித்து அதிர்ச்சி தந்து இருந்தார். இது தொடர்பாகி அவரின் மீது சம்பந்தப்பட்ட நடிகைகள் காவல் நிலையங்களிலும் புகார் அளித்து இருக்கின்றனர். ஆனால், இன்று அவரை விசாரணை நிலையை கூட எட்டவில்லை. 

தனுஷ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து

இந்நிலையில், சமீபத்தில் பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காணொளி ஒன்று வெளியானது. அந்த காணொளியில் அவர் பயில்வான் ரங்கதான் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்து வந்தார். பயில்வான் ரங்கநாதன் பாடகி சுசித்ரா குறித்து பல்வேறு தகவலை முன்பு பகிர்ந்து இருந்தார். 

இதையும் படிங்க: போதையில் விஜய் வீட்டின் முன்பு டான்ஸ் ஆடிய திரிஷா.? சர்ச்சையை கிளப்பிய திரை பிரபலம்.!?

பயில்வானுக்கு சாபம்

இதனிடையே பயில்வானுக்கு சாபம் விட்டுள்ள சுசித்ரா, அந்த வீடியோவில் பேசும்போது ரங்கநாதன் தமிழ் திரையுலகை ஆபாச படமாக்க முயற்சித்ததாகவும், அதனை முன்னணி நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் சேர்ந்து தடுத்தாகவும் அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். 

பயில்வான் பாலமாக இருந்த கதை

இதுகுறித்து அவர் பேசுகையில், "ஒருகாலத்தில் கேரளா மாநிலத்தில் எடுக்கப்பட்ட வயது வந்தோருக்கான ஆபாச படங்களை, சென்னையில் நீங்கள் எடுங்கள் என்று கூறி அதற்கான பாலமாக இருந்தவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவரின் செயல்பாடுகள் தமிழ் திரைஉலகையும், மக்களையும் சீரழிக்கும் என திரைத்துறை ஜாம்பவான்களில் நல்லெண்ணம் கொண்டோர் அவரின் செயல்களை முறியடித்தனர். 

இந்தளவு கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர் தான் இன்று நடிகைகள் பற்றி அவதூறாக பேசுகிறார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலன் இல்லை. காவல் நிலையங்களில் வழக்கு குவிந்தாலும், விசாரணை குறித்த விபரம் இல்லை. அவரின் மகள் இன்று பெண் தன்பாலின ஈர்ப்பாளராக தன்னை அறிவித்து இருக்கிறார். ஊர் பிரச்சனையெல்லாம் பேசி வந்தவரின் வீட்டில் இன்று மிகப்பெரிய பிரச்சனை வந்துவிட்டது. அவர் கடும் துயரடைந்து உயிரிழக்க வேண்டும். என்னை அவர்கள் அவ்வுளவு தூரம் துயரடைய வைத்துவிட்டனர்" என பேசினார்.

அந்த வீடியோ:

இதையும் படிங்க: அடுத்த விவாகரத்து.. ஜி.வி பிரகாஷை தொடர்ந்து இந்த பிரபல நட்சத்திர ஜோடி பிரிய போகிறதா?