நடுரோட்டில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள்.. அடித்து, உதைத்த காவலர்!Police attack Muslims in Delhi

வடக்கு டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம் போல் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். அப்போது மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சிலர் மசூதிக்கு வெளியே சாலை ஓரத்திலும் தொழுது கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர், ஏன் சாலையோரம் தொழுகை செய்கிறீர்கள். எழுந்து போ என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் சாலையில் அமர்ந்து தொழுது கொண்டிருந்தவர்களை அடித்து உதைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் அதன் பின்னர் அங்கு வந்த போலீஸ் உயரதிகாரி இரு தரப்பினரையும் சமாதானம் செய்து கூட்டத்தை கலைத்து வைத்தார். இதனிடையே தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை போலீசார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.