அரசியல் இந்தியா மருத்துவம்

முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை கூட்டம்! என்ன காரணம்!

Summary:

PM talk with chief minister

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. மராட்டியம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துகொண்டே  வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசின் பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு  வருகிறது. 

இந்த நிலையில்,  கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்றார்.

இன்று நடந்த ஆலோசனை கூட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ வசதிகள் அதிகரிப்பு உள்ளிட்டவை பற்றி நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.


Advertisement