"இங்க இருந்து காப்பியடிக்க வேணாம்.. இங்க வந்தே எடுங்க" அட்லீயை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.!
இரண்டு மனைவிகளுக்கிடையே நடந்த தகராறில் சிக்கிய கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்...!!
இரண்டு மனைவிகளுக்கிடையே நடந்த தகராறில் சிக்கிய கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்...!!

சொத்துக்காக இரண்டு மனைவிகளுக்கு இடையே நடந்த தகராறில் கணவரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் வசிப்பவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அஞ்சுமுடன் விவாகாரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தாகர்கானின் சொத்துகள் தொடர்பாக இரண்டு மனைவிகளுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அஞ்சும் மூன்று பேரை அழைத்துக்கொண்டு தாகர்கானின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஹூமாகானுடன் சண்டை போட்டுள்ளார். சத்தம் கேட்டு தாகர்கான் அங்கு வந்தார். அப்போது அவர்களுக்கிடையே நடந்த தகராறில் தாகர்கான் மீது துப்பாக்கிசூடு நடந்துள்ளது. இதில் காயம் அடைந்த தாகர்கானும், அவரது இரண்டாவது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்று உறுதி படுத்தப்படவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.