
petrol diesel gold price changes
இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.
பின்னர் 11:30 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை துவங்கினார் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம், விவசாயத் துறையில் தனியார் நிறுவனங்களின் முதலீடு, புதிய தேசிய கல்விக் கொள்கை என தனது உரையை ஆரம்பித்தார்.
மேலும் பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான் திட்டத்தின் கீழ் "பாரத் நெட்" என்ற பெயரில் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் தடையில்லா இணைய வசதி ஏற்படுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர் இதுவரை 10 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான சுங்கவரி இனி 12.5 சதவீதமாக அதிகரிக்கும் எனவும், மேலும் பெட்ரோல் டீசல் மீது செஸ் வரி அதிகரிப்பதோடு ரோடு கட்டமைப்பு என்ற பெயரில் ஒரு லிட்டர் பெட்ரோல் டீசலுக்கு தலா ஒரு ரூபாய் அதிகரிப்பு எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரை கேட்ட மக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Advertisement
Advertisement