தமிழகம் இந்தியா

பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு..!!

Summary:

petrol deesal rate immediate decrease

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வந்தது.

இதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்துமே காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து கவலை தெரிவித்த நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இவர்களுடன் ஆலோசனை செய்து இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விலை நிர்ணயம், விலைக் குறைப்பை தொடர்ந்து மும்பையில் பெட்ரோல் விலை 88.84   ஆகவும் டீசல் விலை 77.60 ஆகவும் டெல்லியில் பெட்ரோல் விலை 81.49 ஆகவும் டீசல் விலை 72.96 ஆகவும் உள்ளது.


 


Advertisement