கடுமையான வயிற்றுவலியால் துடித்த நபர்!! ஸ்கேன் செய்த மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி..

வயிற்றுவலியால் துடித்த நபரின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் செண்ட் பாட்டிலை வெளியே எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு பரகானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருவ கல்லூரி மருத்துவமனைக்கு 27 வயது இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்றுவலியுடன் வந்துள்ளார். அந்த இளைஞர் வயிற்றுவலியால் துடிப்பதை பார்த்த மருத்துவர்கள் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சோதனைகளை தொடங்கினர்.
சோதனையின்போது நோயாளிக்கு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தலில், அவரது வயிற்றில் பெரிய பாட்டில் ஒன்று இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அந்த இளைஞருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த பாட்டிலை அகற்றினர். சுமார் ஏழரை இன்ச் நீளம் கொண்ட அது ஒரு செண்ட் பாட்டில் ஆகும்.
இவ்வளவு பெரிய செண்ட் பாட்டில் எப்படி அந்த இளைஞரின் வயிற்றுக்குள் சென்றது என்பது தெரியவில்லை எனவும், தனக்கும் இதுகுறித்து ஏதும் தெறியாது என அந்த இளைஞர் கூறியதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் இந்த சம்பவமானது கேட்போரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.