வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
பெண்ணை மரத்தில் கட்டி வைத்து 10 நபர்கள் செய்த வெறிச்செயல்! இறுதியில் மரணமடைந்த பெண்!
ஒடிசாவில் பெண் ஒருவரை ஊர்மக்கள் சேர்ந்து மரத்தில் கட்டி வைத்து அடித்து கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது மகளை பார்க்க சென்ற 48 வயது மதிக்கத்தக்க பெண்ணை குழந்தை கடத்துபவர் என்று நினைத்து ஊர்மக்கள் அடித்து கொன்றுள்ளனர்.
மரத்தில் கட்டி அவரை அடித்துள்ளார், அதிலிருந்து அந்த பெண் தப்பித்துச்செல்ல முயற்சி செய்துள்ளார் ஆனால் ஊர்மக்கள் அவரை கற்களை வீசி தாக்கியும், கம்பால் தாக்கியும் சித்ரவதை செய்துள்ளனர். இதில், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.
தன் வீட்டில் இருந்து கிளம்பியவர் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தோமுஹனி கிராமத்திற்கு சென்றபோது, குழந்தை கடத்தும் பெண் என நினைத்து அடித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது என பொலிசா தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கொலை தொடர்பாக இதுவரை 10 பேரை கைது செய்திருப்பதாகவும், மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.