இந்தியா மருத்துவம் லைப் ஸ்டைல் Covid-19 Corono+

கொரோனாவை குணப்படுத்த 100% மருந்து தயார்..! 1000 பேரை குணப்படுத்திட்டோம்..! 5 நாட்களில் ஆதாரத்துடன் நிரூபிப்போம்..! பதஞ்சலி நிறுவனம்..!

Summary:

Patanjali CEO said they found medicine to cure corono virus

கொரோனாவுக்கு இயற்கையான முறையில் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், ஏற்கனவே  1000 பேரை குணப்படுத்தியுள்ளதாகவும், இன்னும் 5 நாட்களில் ஆதாரத்துடன் நிரூபிப்போம் என பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதேநேரம், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும்  தீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில் இயற்கையான முறையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக  பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ள தகவலின் படி, கொரோனா வைரஸ் பாதிப்பை நீக்கும் மருந்தைக் கண்டறிவதற்காக விஞ்ஞானிகள் குழுவை நியமித்திருப்பதாகவும், அவர்கள்  கண்டுபிடித்துள்ள மருந்து மூலம் 100% சாதகமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தை உட்கொள்ளும் கொரோனா நோயாளி 5 முதல் 14 நாட்களுக்குள்  குணமடைவதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட க்ளினிக்கல் ட்ரையல்களை நடத்தி வரும் நிலையில் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன்  மருந்தை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.


Advertisement