பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களே உஷார்.. சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்து சென்று 2 1/2 வயது குழந்தையை பலாத்காரம் செய்த சிறுவன்.. அதிர்ச்சி சம்பவம்..!
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை தனது பாட்டியுடன் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு வந்து 17 வயது சிறுவன் ஒருவன் குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பதாக பாட்டியிடம் கூறிவிட்டு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளான்.
இந்நிலையில் தெரிந்த சிறுவன் தானே என்று பாட்டியும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் குழந்தை திரும்பி வராததால் அதிர்ச்சடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். இதற்கிடையில் மருத்துவமனை ஒன்றிலிருந்து குழந்தையின் பெற்றோருக்கு போன் வந்துள்ளது. அப்போது மருத்துவமனையில் இருந்து பேசிய நபர் உங்கள் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவன் சாக்லேட் வாங்கி தருவதாக குழந்தையை அழைத்துக் கொண்டு ஒரு ரூமிற்க்கு சென்றுள்ளான். அந்த ரூமில் குழந்தை மயங்கி நிலையில் கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர்.