
நீதிமன்ற வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய மர்ம பொருள்...
டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியதில் நீதிமன்ற வளாகத்தில் சிறிதளவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ரோகிணி நீதிமன்ற வளாகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் லேப்டாப் பையில் வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்துச் சிதறியதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement