ஏழை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! மத்திய அரசு அறிவிப்பு! என்னனு உடனே பாருங்க!
ஏழை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! மத்திய அரசு அறிவிப்பு! என்னனு உடனே பாருங்க!

வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசாங்கம். பிரதம மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு வரும் 2022-ம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித்தருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமான கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளருமான துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த 43-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் சுமார் 12 ஆயிரத்து 174 வீடுகளும், புதுச்சேரியில் 1,158 வீடுகளும் கட்டி தரப்பட்ட உள்ளதாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் 5 லட்சத்து 60 ஆயிரத்து 695 வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை மொத்தம் 79 லட்சத்து 4 ஆயிரத்து 674 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.