இந்தியா உலகம்

ஒலிம்பிக் போட்டியில் திடீரென சட்டையை கிழித்துக்கொண்டு ஓடிய வீரர்!! என்ன காரணம் தெரியுமா??

Summary:

ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் நார்வே வீரர் தனது சட்டையை கிழித்துக்கொண்டு

ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் நார்வே வீரர் தனது சட்டையை கிழித்துக்கொண்டு ஓடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் பிரிவுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நார்வே நாட்டை சேர்ந்த வீரர் கார்ஸ்டன் வார்ஹோம் என்பவர் பந்தய தூரத்தை 45.94 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்ததோடு, தங்க புத்தகத்தையும் வென்றார்.

Norwegian athlete tearing his shirt in the excitement

அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் 46.17 வினாடிகளிலும், பிரேசில் வீரர் அலிசன் சாண்டோஸ் பந்தய தூரத்தை 46.72 வினாடிகளில் கடந்து இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர். இந்நிலையில் தாம் வெற்றிபெற்று, தனது நாட்டிற்கு தங்க பதக்கம் வாங்கி கொடுத்த மகிழ்ச்சியில், நார்வே வீரர் கார்ஸ்டன் வார்ஹோம் தனது சட்டையை கிழித்துக்கொண்டு ஓடி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Advertisement