புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சாலை விபத்துகளை தவிர்க்க ஓட்டுனர்களுக்கு அறிவுரையுடன் தேநீர் வழங்கிய அதிகாரிகள்.!
ஒடிஷா மாநிலத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் பொருட்டு, அம்மாநில அரசு பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலங்களில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாது, இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கம் வெளிமாநில ஓட்டுனர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதனொரு பகுதியாக, நேற்று நள்ளிரவு 3 மணி முதல் 6 மணி வரையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு காவல் துறையினர் தேநீர் வழங்கி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
சாலை விபத்துகள் பெரும்பாலும் அதிகாலை நேரங்களில் ஏற்படுவதால், அதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அம்மாநில அளவில் அதிகாரிகள் மூலமாக விழிப்புணர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது.