தாழ்த்தப்பட்ட வகுப்பு மருத்துவரால் பிரேத பரிசோதனை... தீண்டாமையின் உச்சத்தில் உறவினர்கள் பகீர் செயல்.!



Odisha Doctor Mortuary Local Villagers Caste System

ஒடிசா மாநிலத்தில் உள்ள பர்கார் மாவட்டத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி, நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இவரது உடல் அங்குள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டது. 

அப்போது, பணியில் இருந்த மருத்துவர் பிரேத பரிசோதனையை நிறைவு செய்துள்ளார். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த தகவலை அறிந்த உள்ளூர் பொதுமக்கள் அதிரவைக்கும் செயலை மேற்கொண்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் மருத்துவர் பிரேத பரிசோதனை செய்த கூலித்தொழிலாளியின் உடலை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். கூலித்தொழிலாளியின் உறவினர்களும் இதனையே செய்துள்ளனர். 

இதனால் கூலித்தொழிலாளியின் உடல் இறுதி சடங்கு உட்பட இந்நிகழ்ச்சியும் நடைபெறாமல், கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்களால் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.