என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
சேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.? கொந்தளித்த நெட்டிசன்கள்.!

சேலை கட்டிவந்த பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
அனிதா சவுத்ரி என்ற பத்திரிகையாளர், டெல்லியில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றிற்கு சென்றபோது புடவை அணிந்து இருந்த காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். இதையடுத்து உணவு விடுதி நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவின.
@navikakumar Mam saree is not allowed in restaurant named Aquila in ansal plaza they told we allowed only smart dresses , and saree is not a smart casual, it was my daughter’s birthday today ,the day has spoiled and my fault was just saree. I am attaching my today’s pic also pic.twitter.com/MBoOjo6Jnr
— anita choudhary (@anitachoudhary) September 19, 2021
ஆனால் உணவு விடுதி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதுகுறித்து உணவாக நிர்வாகம் கூறுகையில், அனிதா சவுத்ரி முன்பதிவு செய்யாமல் வந்ததால் காத்திருக்க கூறினோம். அவர் அதை மறுத்ததோடு எங்கள் ஊழியர்களுடன் ஒரு மணிநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், தங்களின் மேலாளரை தாக்கியதால் ஊழியர் ஒருவர் நிலைமையை சமாளிக்க புடவை குறித்து பேசியதாகவும் விளக்கமளித்துள்ளது உணவக நிர்வாகம்.
Saree is not allowed in Aquila restaurant as Indian Saree is now not an smart outfit.What is the concrete definition of Smart outfit plz tell me @AmitShah @HardeepSPuri @CPDelhi @NCWIndia
— anita choudhary (@anitachoudhary) September 20, 2021
Please define smart outfit so I will stop wearing saree @PMishra_Journo #lovesaree pic.twitter.com/c9nsXNJOAO