
கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொ
கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி நியூசிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தத் தடை உத்தரவும் வரும் 11ம் தேதி தொடங்கி 28ம் தேதி (ஏப்ரல் 28) வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இந்தியா வந்துள்ள நியூசிலாந்து நாட்டவருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement