இந்தியாவில் புதியவகை கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.! மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

இந்தியாவில் புதியவகை கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.! மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?



new-virus-increased-in-india

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இங்கிலாந்தில் பரவிவந்த மரபணு மாற்றமடைந்த புதியவகை கொரோனா, மற்ற நாடுகளிலும் பரவத் தொங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விட்டது. இதனால் இங்கிலாந்துக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

corona

இந்த நிலையில்,  இன்று மேலும் 13 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் நாடு முழுவதும் புதியவகை கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

புதியவகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், அந்தந்த மாநில அரசுகளால் தனி அறையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.