இந்தியா

உள்நாட்டு விமான சேவை துவக்கமா! புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த விமான நிலைய ஆணையம்!

Summary:

New rules for domestic air passengers

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மட்டும் மீட்டு வர சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் உள்நாட்டு விமான சேவை இன்னும் துவங்கப்படவில்லை.

தற்போதைய மூன்றாம் கட்ட ஊரடங்கு நாளை மே 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்தக்கட்ட லாக்டவுன் புதிய வடிவில் இருக்கும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதனால் குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் உள்நாட்டு விமான சேவை துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த ஆணையில், பயணிகள் கட்டாயம் ஆரோக்யா சேது செயலியை பயன்படுத்த வேண்டும், ஆண்லைன் செக் இன் செய்து போர்டிங் பாஸினை பிரிண்ட் எடுத்து வர வேண்டும், சக பயணிகளிடம் 4 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க அணிய வேண்டும், 350ml சானிடைஷர் பாட்டில் எடுத்து வர வேண்டும் போன்ற விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.


Advertisement