சூப்பர்... இனி, இந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம்.!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்.!!

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா(PM Shram Yogi Man Dhan Yojna) என்பது அமைப்பு சாரா துறை தொழிலாளர்களுக்கான திட்டமாகும். இதன் கீழ், தெருவோர வியாபாரிகள், ரிக்ஷாக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறையுடன் தொடர்புடையவர்கள் பயன் பெறலாம்.
இந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது, 18 வயதில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.2 சேமிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.36000 பென்ஷன் பெறலாம். ஒருவர் 40 வயதிலிருந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கினால், அவர் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்படி 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தொடங்குவீர்கள். 60 வருடங்கள் கழித்து மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள உங்களிடம் சேமிப்பு வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டை இருக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவாகவும், 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதற்கு, நீங்கள் பொது சேவை மையத்தில் (CSC) திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.