மீண்டும் உருவாகவுள்ள புதிய புயல்.! பெயர் என்ன தெரியுமா.?

மீண்டும் உருவாகவுள்ள புதிய புயல்.! பெயர் என்ன தெரியுமா.?



new-depression

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கன மழையால் பல இடங்களில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை.

இந்தநிலையில், தமிழகத்தில் இன்று டிசம்பர் 2 முதல் 5-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்று ஆந்திரா- ஒடிசா இடையே டிசம்பர் 4-ஆம் தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு 'ஜாவித்' என்று பெயர் சூட்டப்பட உள்ளது.