இனி இந்த அறிகுறிகள் வந்தாலும் கொரோனாவாக இருக்கலாம்..! பரிசோதனை அவசியமாம்..! கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள் வெளியானது..!



new-corono-symptoms-in-tamil

கொரோனா தொற்று மற்றும் அதன் பாதிப்பு குறித்த புதிய அறிகுறிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு துறை.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பேர் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,982,928    என்ற என்னைகையுடன் அமெரிக்கா அதிக பாதிப்புகளில் முதல் இடத்திலும், 1,604,585 என்ற எண்ணிக்கையுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

corono

இதற்கு அடுத்தபடியாக 698,817 என்ற எண்ணிக்கையுடன் இந்தியா உலகளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க முக கவசம், சமூக இடைவெளி போன்றவை தேவை எனவும், கொரோனா அறிகுறிகள் குறித்த தகவல்களையும் மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு வாரியம் அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் போன்றவை இருந்தாலும் கொரோனா அறிகுறிகளாக கருத்தப்பட்டுவந்த நிலையில், தலைவலி,வாந்தி, வயிற்றுப் போக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.