இந்தியா வர்த்தகம்

விரைவில் புதிய ரூபாய் நோட்டுகள்! ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

Summary:

New 20 rupee note coming soon reserve bank

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னதில் இருந்து புதிய ரூபாய் நோட்டு அறிமுகம் என்றாலே மக்கள் அதிர்ச்சி அடையும் நிலையில் உள்ளனர். இத்தகைய நிலைக்கான காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாய் நோட்டு-ஐ வெளியிட உள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி 10, 50, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டும் வெளியிட உள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய காந்தி சீரியஸ்-இல் நவம்பர் 2016 முதல் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இப்படி வெளியிட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளும் வடிவம் மற்றும் நிறம் அனைத்தும் புதியது. இதனால் சாமானிய மக்கள் குழப்பத்தில் மூழ்கினர்.

மார்ச் 12, 2016 தகவலின் படி 492 கோடி 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், மார்ச் 2018இல் இதன் எண்ணிக்கை 1000 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement