பீகாரில் நக்சலைட்டுகளா..? புதருக்குள் இருந்த வெடிகுண்டுகள்.. தீவிர விசாரணை..!naxalites-in-bihar-explosives-in-the-bush-intensive-inv

பீகார் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லுதுய்யா பஹாட் பகுதியில் நக்சலைட்டுகள் வெடிபொருட்களை மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து பீகார் காவல்துறையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Naxalites

இந்த தீவிர தேடுதல் வேட்டையில் அப்பகுதியில் உள்ள புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அங்குள்ள குகையில் 149 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.