குலை நடுங்கும் வீடியோ காட்சி! சுவரின் ஓரத்தில் நின்ற சிறுமிக்கு கார் ஓட்டுனரால் ஏற்பட்ட கொடூரம்.navi-mumbai-car-accident-video-goes-viral

மும்பையில் உள்ள கலாம்போலி என்னும் குடியிருப்பு பகுதியில் சுவர் ஓரமாக நடந்துசென்ற சிறுமியிமை சுவரோடு சுவராக நசுக்கியபடி கார் ஓன்று இழுத்துச்சென்ற கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவர் தனக்கு முன்பாக கார் வருவதை அறிந்து சுவர் ஓரமாக செல்கிறார். அதிவேகத்தில் வந்த கார் அந்த சிறுமியை சுவரோடு சுவராக சேர்த்து இழுத்து செல்கிறது. மேலும், அருகில் இருந்த மற்றொருவர் மீதும் அந்த கார் மோதுவது போல் செல்கிறது.

accident

இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த குழந்தையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்னனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த குழந்தைக்கு தற்போது சிகிச்சை நடைபெற்றுவருகிறது.

மேலும், விபத்தை ஏற்படுத்திய நபரை விசாரித்ததில் அவர் தற்போதுதான் கார் ஓட்ட கற்றுக்கொள்வதாக போலீசில் கூறியுள்ளார். கவனக்குறைவாக கார் ஒட்டிய குற்றத்திற்காக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கார் அந்த குழந்தையின் மீது மோதி இழுத்து செல்லுவதும், அந்த குழந்தை சுருண்டு விழுவதும் அங்கிருந்த CCTV யில் பதிவாகி தற்போது வைரலாகிவருகிறது. இந்த காட்சியை பார்க்கும்போது நெஞ்சம் பதபதைக்கிறது.