மும்பை தாராவியில் மேலும் இருவர் உயிரிழப்பு.! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!

மும்பை தாராவியில் மேலும் இருவர் உயிரிழப்பு.! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!


Mumbai taravi place two members died

மும்பையில் அதிக குடிசைப்பகுதிகளை கொண்ட தாராவி பகுதியில் தற்போது கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தாராவி பகுதியில் மக்கள் அதிகமாகவும், நெருக்கமாகவும் இருப்பதாலும் கொரோனா வைரஸானது எளிதில் பரவி வருகிறது.

இதனால் அம்மாநில அரசு தாராவியின் முக்கிய பகுதிகளை சீல் வைத்துள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை தாராவி பகுதியில் மட்டும் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸால் மேலும் இருவர் இன்று பலியாகியுள்ளனர். மொத்தமாக இதுவரை தாராவியில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.