இந்தியா லைப் ஸ்டைல்

சாலையில் மிதந்துசென்ற இரண்டு இளைஞர்கள்..! இப்படி ஒரு பயணமா.? வைரலாகும் வீடியோ..!

Summary:

Mumbai rain 2 youths ride on floating with mattress viral video

மும்பையில் நேற்று முன்தினம் பெய்த கடும் மழையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மும்பையில் பெய்துவரும் கனமழையால் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி மறைந்துள்ளது. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரில் வாகனங்கள் மழைநீரில் நீந்திசெல்வதுபோல் சென்றுவருகிறது. மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் மேலும் மழை பெய்யக்கூடும் எனவும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளநிலையில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டுவருகின்றனர்.

ஆனால் இத்தகைய சிரமமான சூழலையும் மிகவும் ஜாலியாக எடுத்துக்கொண்டு 2 இளைஞர்கள் செய்துள்ள காரியம் இணையத்தில் வைரலாகிவருகிறது. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் மிதக்கும் வகையிலான படுக்கை ஒன்றில் இளைஞர்கள் இருவர் படுத்துக்கொண்டு,ஒருவருடன் ஒருவர் ஜாலியாக பேசிக்கொண்டு சாலையில் மிதந்து செல்கின்றனர்.

இந்த சூழலிலும் இவ்வளவு ஜாலி தேவையா என நெட்டிசன்கள் காமெடியாக கமெண்ட்  செய்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement