தனது துணிகளை தானே துவைத்துக்கொள்ளும் ம.பி முதல்வர்! என்ன காரணம்?

தனது துணிகளை தானே துவைத்துக்கொள்ளும் ம.பி முதல்வர்! என்ன காரணம்?


Mp cm washed his dress

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாடுமுழுவதும் பல கட்டங்களாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆரம்பத்திலிருந்து அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, போபாலில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் உள்ள போதும்,  மருத்துவமனையில் இருந்த படியே காணொலி வாயிலாக தனது அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 


அப்போது பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவமனையில் எனது துணிகளை நானே துவைத்துக்கொள்கிறேன். ஏனெனில், கொரோனா நோயாளிகள் தங்களது துணிகளை பிறரிடம் துவைக்க கொடுக்கக் கூடாது. 

இவ்வாறு துணிகளை துவைப்பதன் மூலம் சில பலன்களையும் நான் பெற்றுள்ளேன். எனது கையில் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். பல பிசியோதெரபி பயிற்சி முடித்த பின்பும், கைகளில் விரல்களை மடக்கி அமுக்க முடியாமல் இருந்து வந்தது. தற்போது, துணிகளை துவைத்த பின்னர் அது சரி ஆகிவிட்டது என தெரிவித்தார்.