அசைவ உணவுகளை அதிகம் விரும்பும் ஆண்கள் - இந்திய அளவில் புள்ளி விவரங்களில் தகவல்..!

அசைவ உணவுகளை அதிகம் விரும்பும் ஆண்கள் - இந்திய அளவில் புள்ளி விவரங்களில் தகவல்..!



more-men-prefer-non-vegetarian-food-in-india

இந்தியாவில் அதிக அளவில் அசைவ உணவுகளை விரும்பி உண்பது ஆண்கள் தான் என்பது தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பின் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு 2019-21 ஆண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அசைவ உணவு உண்பவர்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டது.

மேலும் 2015-16 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை ஒப்பிட்டு தற்போதைய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி 2019 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 83.4 சதவீத ஆண்களும் 7.6 சதவீத பெண்களும் தினமும் அசைவ உணவு சாப்பிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

அதே சமயம் 2015-16 ஆம் ஆண்டில் 78.4 % ஆண்களும் 70% பெண்களும் மட்டுமே அசைவ உணவை சாப்பிட்டு வந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 15 வயது முதல் 40 வயது வரை உள்ள பிரிவில் அசைவ உணவை சாப்பிடாமல் இருந்த ஆண்களில் தற்போது 16.6 சதவீதம் பேர் மீன் இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவது தெரியவந்துள்ளது. 

அதேபோல 15 முதல் 49 வயதுவரை உள்ள பிரிவில் அசைவ உணவு சாப்பிடாத பெண்களில் தற்போது 29.4 பேர் மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை உண்பது தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பின் மூலம் தெரியவந்துள்ளது.