குழந்தைகளின் கல்விக்காக தாலியை விற்று டி.வி வாங்கிய தாய்! நெகிழ்ச்சி சம்பவம்!

குழந்தைகளின் கல்விக்காக தாலியை விற்று டி.வி வாங்கிய தாய்! நெகிழ்ச்சி சம்பவம்!


mom sale her mangalsutra for buy ne tv

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. கொரோனாவின் காரணமாக எந்த பள்ளிகளும் திறக்கப்படாததால் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. இந்தநிலையில் குழந்தைகளை எப்போது பள்ளியில் சேர்ப்பது, ஏற்கனவே படித்துக்கொண்டிருந்த குழந்தைகள் எப்போது பள்ளிக்கு போவார்கள் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. 

இதனையடுத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் கடக் மாவட்டம் ரத்திர் நகநூர் என்ற கிராமத்தைச்சேர்ந்த கூலித் தொழிலாளியும் அவரின் மனைவி கஸ்தூரியும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் குழந்தைகள் தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதற்கு அவர்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லாமல் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று படித்து சிரமப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து தனது குழந்தைகளின் கல்விக்காக உதவ நினைத்த தாய் கஸ்தூரி, தனது தாலியை அடகு வைத்து 14 ஆயிரம் ரூபாய் பணத்தில் புதிய டிவி வாங்கியுள்ளார். இந்த தகவல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இந்நிலையில் தாலியை அடகுக்கடையில் இருந்து மீட்ட அதிகாரிகள் மீண்டும் கஸ்தூரியிடமே கொடுத்தனர்.