உறங்கும் தனது அன்பு மகனை சூட்கேசில் படுக்கவைத்து இழுத்து செல்லும் தாய்..! ஊரடங்கின் உச்சம்..! கண்கலங்க வைக்கும் அதிர்ச்சி காட்சி..!



Mom carry his sleeping son on suitcase video goes viral

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. வைரஸ் பரவ தொடங்கி 6 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை இந்த வைரஸை தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், மக்களின் உயிரை காப்பாற்ற அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு வந்த தொழிலார்கள், மீண்டும் தங்கள் ஊருக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டுவருகின்றார்.

பல இடங்களில் மக்கள் நடந்தும், சைக்கிள் மூலமாகவும் பலநூறு கிலோமிட்டர்களை கடந்து வருகின்றனர். இந்நிலையில் சாலையில் நடந்துசெல்லும் தாய் ஒருவர், தூங்கிக்கொண்டிருக்கும் தனது மகனை சூட்கேஸ் மீது படுக்கவைத்து, அவனை சூட்கேஸுடன் சேர்த்து இழுத்து செல்லும் வீடியோ காட்சி பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது. இதோ அந்த காட்சி.