வைரல் வீடியோ: துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவும் பிரதமர் மோடி!

வைரல் வீடியோ: துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவும் பிரதமர் மோடி!


Modi washing employees legs

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பிரயாக்ராஜ் சென்று கும்பமேளாவில் புனித நீராடி வழிபாடு செய்தார்.

சங்கம் படித்துறையில் மகா ஆரத்தி வழிபாடு செய்து இந்திய மக்கள் நலனுக்காக வேண்டிய பிரதமர் மோடி, கும்பமேளா இடத்தை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இந்த தருணத்தை நினைத்து நான் என் வாழ்நாள் முழுதும் பெருமைபடுவேன். என் கனவான தூய்மை இந்தியா திட்டத்தினை நிறைவேற்றி கொண்டிருக்கும் இந்த தொழிலாளர்களை கௌரவப்படுத்துவது மிகவும் இன்றியமையாத ஒன்று. மேலும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.